UAE : அமீரகவாசிகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு..!!! வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுகோள்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) மற்றும் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் (National Emergency and Crisis Management), ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் அவசர காலங்களைத் தவிர வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்படுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அவசரநிலை, வேலை, மளிகைப் பொருட்கள் அல்லது மருந்துகளை வாங்குதல் போன்ற காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவசரநிலைகளைத் தவிர்த்து மருத்துவமனைகள் அல்லது மருத்துவ கிளினிக்குகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாகனங்களில் பயணிப்பவர்கள் தங்கள் கார்களில் மூன்று நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து, டாக்சிகள் மற்றும் பிற போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் அறிவுறுத்தல்கள் பின்னர் வழங்கப்படும், என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் மற்றும் தேசத்தில் வாழும் அனைவரையும், திறமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் முக்கியமாக சமூக தொடர்புகளை மட்டுப்படுத்துதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அமைச்சகம் தெரிவித்துள்ள விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பான ஐக்கிய அரபு அமீரக சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.