ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு..!!! மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என துபாய் DTCM தகவல்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கொரோனாவின் தாக்கத்தை முன்னிட்டு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடல், அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளும் தற்காலிக நிறுத்தம், பொழுதுபோக்கு இடங்கள் மூடல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் பிற பொழுதுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தைக்கான துறை (Department of Tourism and Commerce Marketing,DTCM) ஏப்ரல் 14 ம் தேதி வெளியிட்டுள்ள தொழில் சுற்றறிக்கையின்படி, மேற்கூறிய நிறுவனங்களுடன் சேர்த்து உள்நாட்டு டூரிஸ்ட் ஆபரேட்டர்களும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கைகள் பற்றிய சுற்றறிக்கையில் இவை அனைத்தும் மேலும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் அரசாங்கத்தின் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்க, மறு அறிவிப்பு வரும் வரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தனது வலைதளத்தில் உள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேலும் நீட்டிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeதுபாய் சுற்றுலாத்துறை வெளியிட்ட முந்தைய சுற்றறிக்கைகளில் அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள், உடற்பயிற்சி மற்றும் சுகாதார மையங்கள் (fitness and health centres) மற்றும் கஃபே மற்றும் ஹோட்டல்களில் வழங்கப்படும் ஷீஷா (shisha) சேவைகள் ஆகிய அனைத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
source : Gulf News