கத்தாரில் வசிப்பவர்கள் ஜூலை 26 க்கு முன்னர் “தேசிய முகவரியை” பதிய வேண்டும்..!! தவறினால் தண்டனை மற்றும் அபராதம்..!! MOI அறிவிப்பு..!! .
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “தேசிய முகவரி (National Address)” தொடர்பான சட்டத்தின் 24 ஆம் இலக்க விதியின் படியும், மற்றும் 2019 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் அமல்படுத்தப்பட்ட ஆணை என் 96 ன் படியும், தேசிய முகவரியில், இதுவரையிலும் பதிவு செய்யாத கத்தார் நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வருகின்ற 2020 ஜூலை 26 க்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் ‘மெத்ராஷ் 2 (Metrash2)‘ எனும் அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது அதன் வலைத்தளமான www.moi.gov.qa மூலமாகவோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதனை மீறுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், சாதாரண வேலை நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் சேவை மையங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் சேவை மையங்களின் தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளது.
Sr. No | Service Center | Telephone Number | Sr. No | Service Center | Telephone Number |
1 | Musaimeer | 2350888 | 9 | Wakra | 2351090 |
2 | Dhaayin | 2351205 | 10 | Dukhan | 2353131 |
3 | Industrial Area | 2351151 | 11 | Rayyan | 2350333 |
4 | Al Khor | 2351299 | 12 | Mesaeed | 2351003 |
5 | Shanmal | 2351900 | 13 | Souq Waqif | 2340608 |
6 | Hamad Medical Corporation | 2350380 | 14 | Onaiza | 2350444 |
7 | Shahhaniyya | 2352888 | 15 | Pearl Qatar | 2340404 |
8 | Ummu Sulal | 2351822 |
தேசிய முகவரி சட்டம் தொடர்பான செயல்முறை தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தங்களின் தகவல்களை எவரேனும் பதிவிட தவறினால், அவர்களுக்கு தேசிய முகவரிச் சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் தண்டனை வாங்கப்படும் என்றும், இது தொடர்பான எந்தவொரு விதிமுறைகளையும் மீறும் எவருக்கும் அதிகபட்சம் 10,000 கத்தார் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தெரிந்தே ஒருவர் தவறான தகவல்களை பதிவிடுவோராயின், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe