அமீரக செய்திகள்

அமீரகத்திலிருந்து சொந்த நாட்டிற்கு செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட்டில் ஸ்பெஷல் ஸ்டிக்கர்..!! துபாய் GDRFA-ன் பிரியாவிடை செய்தி..!!

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக திரும்பி செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பிரியாவிடை ஸ்டிக்கர் ஒன்று துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை இயக்குநராகத்தால் (General Directorate of Residency and Foreigners Affairs in Dubai,GDRFA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விமான இடைநீக்கம் காரணமாக அமீரகத்தில் இருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்த மக்கள், தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளில் அந்தந்த நாட்டு மக்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளுக்கான விமானங்களில் செல்லும் மக்கள் துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் பொதுவெளியுறவுத் துறை இயக்குனரகம் (General Directorate of Residency and Foreigners Affairs in Dubai,GDRFA) அறிமுகப்படுத்தியுள்ள ‘விமானத்தில் பாதுகாப்பாக செல்லுங்கள்..விரைவில் சந்திப்போம்’ (Have a Safe Flight, We’ll Meet Soon) என்ற செய்தியுடன் கூடிய ஸ்டிக்கரை தங்களின் பாஸ்போர்ட்டில் பெறுகிறார்கள். இந்த ஸ்டிக்கரானது பயணிகள் பாஸ்போர்ட்டின் முகப்பில் ஒட்டப்படுகிறது.

இது குறித்து GDRFA-துபாய் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அல் மர்ரி (Major General Mohammad Al Marri) கூறுகையில், இந்த முயற்சி பயணிகளுக்கு நம்பிக்கையின் செய்தியாகப் பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இவர் கூறுகையில் “அமீரகத்தில் இருக்கும் மக்கள், நாட்டைவிட்டு வெளியேறும் போது அவர்கள் கடைசியாக பார்ப்பது இந்த ஸ்டிக்கர். எனவே, அவர்கள் அமீரகத்திற்கு மீண்டும் வருவதற்கான வரவேற்பை இதில் பெறுகிறார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கும். இந்த கடினமான சூழ்நிலைகளில், GDRFA-துபாய் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் அனைத்து சுற்றுலாவாசிகள் மற்றும் குடியிருப்பாளர்களும் தங்கள் பயண நடைமுறைகளை முடித்துக்கொண்டு தங்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான வழிமுறைகளை எளிதாக்க ஆர்வமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கள் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!