துபாயில் இலவச பேருந்து சேவை மற்றும் டாக்ஸி கட்டணத்தில் 50% தள்ளுபடி..!! சுத்திகரிப்பு நாட்களில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோருக்காக சிறப்பு சலுகை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு வாரங்கள் நடைபெற உள்ள 24 மணி நேர சுத்திகரிப்பு பணியை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் வெளியில் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருந்து மற்றும் இன்ன பிற தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மேலும் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையிலிருந்து குறிப்பிட்ட முக்கிய துறைகளை சார்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில துறையை சார்ந்தவர்களுக்கு வேலை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் என்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு, RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இரு வாரங்களில் பொது வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட துறையை சார்ந்த தனிநபர்களுக்கு இலவச பேருந்து சேவையும் மற்றும் துபாய் டாக்ஸி மற்றும் உரிமம் பெற்ற டாக்ஸிகளில் வழக்கமான கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் (Command and Control Centre for Combating Covid-19) இணைந்து துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு (Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management) வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடர்ந்து துபாயின் அனைத்து பகுதிகளிலும் இரண்டு வார காலத்திற்கு 24 மணி நேரமும் சுத்திகரிப்பு செய்ய (Sterilisation) தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக RTA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Taxi fare will also be reduced by 50%, in support of the groups that necessitated the need to operate under these circumstances. #DubaiTaxi pic.twitter.com/QdSE9QDVxA
— RTA (@rta_dubai) April 4, 2020
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும் இந்த காலகட்டத்தில் துபாய் மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும் என்று RTA தெரிவித்துள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் சமூக உறுப்பினர்களுக்கு எங்களின் ஆதரவை வழங்க முற்படுவதாகவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சமூக உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்றும் RTA வலியுறுத்தியது.