அமீரக செய்திகள்

UAE : சமூகத்தில் பாகுபாடு மற்றும் வெறுக்கத்தக்க பேச்சில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!! 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு மொழி பேசக்கூடிய பல நாட்டு மக்களை எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஆதரிக்கும் பன்முக தன்மை கொண்ட நாடாகும். அமீரகத்தில் வாழும் பல்வேறு சமூக மக்களிடையே பிளவுகளை தூண்டும் செயல்களை அமீரகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. அவ்வாறு மக்களிடையே பாகுபாடுகளை தோற்றுவிக்கும் அல்லது சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க பேச்சில் ஈடுபடும் எவருக்கும் அமீரகம் சட்டப்படி தண்டனை வழங்குவதில் உறுதியாக இருக்கின்றது. இதன்படி, ஒரு நபர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தை புண்படுத்தியோ அல்லது மக்கள் வெறுக்கக்கூடிய பேச்சை வெளியீடுவதையோ ஐக்கிய அரபு அமீரக அரசு கடுமையாக எச்சரிக்கிறது.

சமீப காலங்களில், சில நபர்கள் சமூக வலைத்தளங்களில் மக்களிடையே வெறுப்பை தூண்டும் அளவிலான பேச்சில் ஈடுபட்டதற்காக அவர்கள் அமீரகத்தில் தாங்கள் பார்க்கும் வேலையில் இருந்து நீக்கப்பட்டு மற்றும் அமீரக காவல்துறையால் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இவ்வாறான செயலில் ஈடுபடுபவருக்கு அமீரகத்தின் கூட்டாட்சி பொது வழக்கு ஆணையம், இன பாகுபாடு அல்லது வெறுப்பை வெளிப்படுத்திய குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவருக்கும் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது..

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியலமைப்பின் 30 வது பிரிவின்படி, கருத்துச் சுதந்திரம் சட்டத்தின் எல்லைக்குள் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. “2015 ஆம் ஆண்டின் பெடரல் ஆணைச் சட்டம் எண் 2 இன் பிரிவு 7 ஐ மேற்கோள் காட்டி பொது வழக்கு விசாரணை அமைப்பு கூறியதாவது, அதில் எந்தவொரு நபரும் எந்தவொரு வெளிப்பாட்டின் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ வெறுக்கத்தக்க பேச்சு சம்பந்தப்பட்ட எந்தவொரு செயலையும் செய்தால், ஐந்து வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனையும், 5,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது

மத வெறுப்பைத் தூண்டும் மற்றும் / அல்லது எந்தவொரு வெளிப்பாட்டின் மூலமாகவும் மதத்தை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஐக்கிய அரபு அமீரக சட்டம் தடைசெய்துள்ளது. அது சமூக வலைதளத்தின் வழியாக ஒருவர் வெளியிடும் பேச்சு அல்லது எழுதப்பட்ட சொல், வரைபடங்கள், பதிவுகள், ஆடியோ, வீடியோ போன்றவையாக இருக்கலாம்.

எந்தவொரு மதத்தையும் துஷ்பிரயோகம் செய்வது அல்லது மத சடங்குகள், புனித தலங்கள் அல்லது சின்னங்களை அழித்தல் போன்றவையும் இதிலடங்கும். இத்தகைய செயலில் ஈடுபடும் எவரும் குற்றவாளியாக்க கருதப்பட்டு அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

source : Khaleej Times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!