வளைகுடா நாடுகளில் தவிக்கும் கேரள மாநிலத்தவர்களுக்கு இலவச விமான டிக்கெட்..!! மெகாஸ்டார் மம்மூட்டி தலைமையில் திட்டம் தொடக்கம்..!!
கேரளாவை சேர்ந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி தலைமையில், கொரோனா பாதிப்புகளினால் வேலையை இழந்து, ஏர் இந்தியாவால் இயக்கப்படும் சிறப்பு விமானங்களால் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் இந்தியர்களில் பணமின்றி தவிக்கும் கேரளாவை சார்ந்த தொழிலாளர்களுக்கு, பிரபலமான மலையாள சேனலான கைராலியின் சார்பாக இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளதாக அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஜான் பிரிட்டாஸ், “வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் கேரளா மாநிலத்தவர்களில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு 1,000 விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
“வளைகுடா நாடுகளில் துன்பத்தில் இருக்கக்கூடிய உள்ள கேரள மாநிலத்தவர்களை, தனி நபர் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த நடவடிக்கைக்கு, இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் GCC நாடுகளில் உள்ள வெளியுறவு அமைச்சகங்களிடம் இருந்து சிறப்பு அனுமதிகள் பெறப்பட வேண்டும்” என்றும் ஜான் பிரிட்டாஸ் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இரண்டாவது கட்டமாக, “வெளிநாட்டினருக்காக கைராலி கைகோர்த்தல் (Kairali joining hands for expats)” என்ற திட்டத்தின் மூலம், மேலும் நூற்றுக்கணக்கான தகுதி வாய்ந்தவர்களுக்கு விமான டிக்கெட் வழங்கப்படும். எங்களின் இந்த திட்டத்திற்கு பல பகுதிகளிலிருந்தும் உற்சாகமான ஆதரவு கிடைக்கிறது. ஏற்கனவே GCC நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளன. மேலும் இலவச டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளன” என்றும் ஜான் பிரிட்டாஸ் கூறியுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe“மெகாஸ்டார் மம்மூட்டியின் தலைமையில் செயல்படும் இந்த திட்டத்தின் மூலம் மிகவும் நெருக்கடிக்குள்ளானவர்களுக்கு மட்டுமே ரூபாய் 15000 மதிப்பிலான ஒரு வழி பாதைக்கான டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவில் நோர்கா ரூட்ஸின் இயக்குநரான O.V.முஸ்தபா, கைராலி டிவியின் மத்திய கிழக்குத் தலைவரான E.M.அஷ்ரப், வெளிநாடு வாழ் கேரளத்தவர்களுக்கான ஆணையம், அமீரகத்தை சார்ந்த தொழிலதிபர் V.K. அஷ்ரப் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பார் என்றும், மேலும் S. ரமேஷ் மற்றும் முகமது பைஸ் ஆகியோருடன் இனைந்து இது தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் தென்னிந்திய சேனலான கைராலி டிவியின் தலைவராக மெகாஸ்டார் மம்மூட்டி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதுவரையிலும் 64 விமானங்கள் மூலம் இந்த திருப்பு அனுப்பும் நடவடிக்கையை முதல் கட்டமாக 12 நாடுகளில் மேற்கொண்டு வருகின்றது.