மார்ச் 1 க்கு பிறகு காலாவதியான அமீரக விசாக்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதா..!! எப்படி தெரிந்து கொள்வது..!!

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், அமீரகத்தில் காலாவதியாகக் கூடிய அனைத்து ரெசிடென்ஸ் விசாக்கள், நுழைவு அனுமதி மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளின் செல்லுபடியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பதாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் அமீரக குடியிருப்பாளர்கள், வேலை தேடி விசிட்டில் வந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என அனைவரும் கொரோனாவின் பாதிப்பையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து, அமீரக அரசாங்கம் மேலே குறிப்பிட்ட விசாவில் இருக்கும் அனைவருக்கும் இவ்வாண்டு இறுதி வரையிலும் அமீரகத்தில் தங்கி கொள்ள அனுமதி அளித்திருந்தது
அதனை தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநகரத்தை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர், மார்ச் 1, 2020 க்குப் பிறகு ரெசிடென்ஸ் விசா, எமிரேட்ஸ் ஐடி, நுழைவு அனுமதி போன்றவை காலாவதியானால் அவற்றை புதுப்பிக்க வேண்டியதில்லை, இந்த செயல்முறை தானாகவே நீட்டிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இத்தகைய விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் விசா நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்காக இரண்டு அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை அமீரக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளங்களில் தங்களின் விசா எண், முதல் பெயர், நேசனாலிட்டி, பிறந்த தேதி போன்ற அடிப்படை தகவல்களை பகிர்வதன் மூலம், தகவல்கள் கொடுக்கப்பட்ட நபரினுடைய விசாவின் தற்போதய நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link 1 : https://amer.gdrfad.gov.ae/visa-inquiry
Link 2 : http://www.gdrfa.ae/portal/pls/portal/INIMM_DB.DBPK_VISAVALIDITY.Query_VisaValidity