நகராட்சி துறையில் வெளிநாட்டினருக்கு பதிலாக குடிமக்களை பணியமர்த்த குவைத் அரசு திட்டம்..!!
குவைத் நாட்டின் நகராட்சி துறை (Municipality) அமைச்சர் வாலித் அல் ஜாசிம், அந்நாட்டின் குடிமக்களை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக நகராட்சி துறையில் வேலை செய்யும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதது.
ஈத் அல் பித்ர் விடுமுறைக்குப் பின்னர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை அமைச்சர் சந்தித்து, முக்கியமாக செயலகம் (secretariat) மற்றும் பல்வேறு துறைகளில் பதிவு செய்தல் (registration in different sectors) போன்ற நிர்வாக வேலைகளில் (Administrative jobs) மாற்றுத் திட்டம் குறித்து விவாதிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பொது பதிவு முறையானது டிஜிட்டல் மயமாக்கப்படும். இதனால், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈத் விடுமுறைக்கு பின்னர் வெளிநாட்டினரின் சேவையை நிறுத்தும் செயல்முறை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் 1,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் முனிசிபாலிடி துறையில் வேலை செய்கிறார்கள் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குவைத்தின் 4.6 மில்லியன் மக்கள்தொகையில் வெளிநாட்டு தொழிலாளர்கள்
3.3 மில்லியன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source : Gulf News