சவூதி அரேபியாவில் பிறை தென்படாததால் ஞாயிற்றுக்கிழமை ஈத் அல் பித்ர் என அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24,2020) ஷவ்வால் மாதம் 1 ம் தேதி ஈத் அல் பித்ர் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. சவூதி அரேபியா வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் ஞாயிற்றுக்கிழமை ஈத் அல் பித்ர் என அறிவித்துள்ளது. இதே போன்று கத்தார், குவைத், பஹ்ரைன், மலேசியா, இந்தோனேசியா, துருக்கி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஈத் அல் பித்ர் ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் ஐக்கிய அரபு அமீரக அரசு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருநாள் தொழுகையை அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
#UAE announces Eid Al Fitr on Sunday, May 24.
— Dubai Media Office (@DXBMediaOffice) May 22, 2020
#BREAKING: #SaudiArabia will celebrate #EidAlfitr on Sunday as Shawwal moon was not sighted on Friday pic.twitter.com/ctbZY1g3bz
— Saudi Gazette (@Saudi_Gazette) May 22, 2020
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe