அமீரக செய்திகள்

UAE : “Covid-19 Free” மருத்துவமனைகளாக மாறி வரும் பல மருத்துவமனைகள்..!! கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அபுதாபியின் மகத்தான சாதனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து அமீரகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் இரவு பகல் பாராமல் அயராது கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்களின் கடுமையான உழைப்பின் பலனாக தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அபுதாபியில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சில மருத்துவமனைகளானது கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக மாறி வருகின்றன. அபுதாபி சுகாதாரத் துறை மற்றும் அரசின் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக அபுதாபியில் உள்ள மருத்துவமனைகள் ஒன்றன் பின் ஒன்றாக கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக மாறியுள்ளன.

மெடிகிளினிக் மருத்துவமனைகள் (Mediclinic Hospitals)

கடந்த ஜூன் மாதம் 22 ம் தேதி அன்று அபுதாபி மற்றும் அல் அய்னில் இருக்கக்கூடிய மெடிகிளினிக் மருத்துவமனைகளானது கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனையாக முதலில் அறிவிக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செயல்பட்ட மெடிகிளினிக் மருத்துவமனைக்கு சொந்தமான யுனிவர்சல் மருத்துவமனையிலும் (Universal Hospital), கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இந்த மருத்துவமனைகள் கொரோனா நோயாளி இல்லாத (Covid-19 free) மருத்துவமனைகளாக திகழ்கின்றன.

தற்பொழுது இந்த மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கான வெளி நோயாளி மற்றும் உள் நோயாளி பிரிவுகள் முழுமையாக செயல்படுவதாகவும், கொரோனா பாதிக்கப்படாத மற்ற நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி முபதாலா ஹெல்த்கேர் நெட்வொர்க் (Mubadala Healthcare Network)

அபுதாபியில் இருக்கும் முபதாலா ஹெல்த்கேர் நெட்வொர்கானது தனது அனைத்து மருத்துவமனைகளும் அபுதாபி சுகாதார துறையினால் கொரோனா நோயாளியில்லா மருத்துவமனையாக (Covid-19 free) அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன் நிர்வாகத்திற்கு சொந்தமான கிளேவ்லேண்ட் கிளினிக் அபுதாபி (Cleveland Clinic Abu Dhabi), ஹெல்த்பாயிண்ட் மருத்துவமனை (Healthpoint) மற்றும் இம்பீரியல் காலேஜ் லண்டன் டயாபெடிக்ஸ் சென்டர் (Imperial College London Diabetes Centre) போன்ற மருத்துவமனைகள் கொரோனா நோயாளி இல்லாத மருத்துவமனைகளாக மாறியுள்ளதாகவும், இந்த மருத்துவமனைகளில் தற்பொழுது கொரோனா இல்லாத மற்ற நோயாளிகளுக்கு வழக்கமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADNEC கள மருத்துவமனை (ADNEC Field Hospital)

அபுதாபியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கள மருத்துவமனைகளில் (field hospitals) ஒன்றான ADNEC கள மருத்துவமனையும் இந்த வரிசையில் இணைந்திருப்பதாக அபுதாபி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

31,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கள மருத்துவமனையானது, அபுதாபியின் மகுட இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுக்கிணங்க நிறுவப்பட்ட மருத்துவமனையாகும்.

இந்த கள மருத்துவமனையில் 1000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 73 மருத்துவ வல்லுநர்கள், 260 செவிலியர்கள், 268 உதவியாளர்கள், 17 தொழில்நுட்பவியலாளர்கள், 9 பார்மசிஸ்ட், 30 ஐக்கிய அரபு அமீரக ரெட் கிரெசென்ட் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!