அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் இணைப்பு..!! மதுரை, கோவை செல்லும் என அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இதுவரை 125,000 இந்தியர்கள் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமீரகத்தில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களில் இந்தியாவிற்கு திரும்ப விரும்புபவர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 450,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தூதரகத்தில் இந்தியாவிற்கு செல்ல வேண்டி பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஜூலை 1 ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கூடுதலாக விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படும் விமானங்களின் டிக்கெட்டுகளை நேரடியாக புக்கிங் செய்து கொள்ளலாம் என தூதரகம் அறிவித்ததையொட்டி பெரும்பாலான விமான டிக்கெட்டுகள் ஏற்கெனவே தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவிற்கு செல்லும் விமானங்களுக்கான டிக்கெட்களில் 75 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே நேரடியாக புக்கிங் செய்வதற்கு ஒதுக்கியதாகவும் மீதமுள்ள 25 சதவீத டிக்கெட்டுகள் அவசர நிலை காரணமாக இந்தியாவிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு தூதரகங்கள் மூலம் அனுப்பி வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தியா செல்வதற்கான டிக்கெட் வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக சேர்க்கப்பட்ட விமானங்களில் 4 விமானங்கள் சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை விமான நிலையத்திற்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக சேர்க்கப்பட்ட விமானங்களின் விபரங்கள்