வளைகுடா செய்திகள்
VBM-4 : ஓமானிலிருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!! தமிழகத்திற்கு நான்கு விமானங்கள்..!!
இந்திய அரசின் மூலம் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் தற்பொழுது கூடுதல் விமானங்களை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விமானங்களுடன் சேர்த்து தற்பொழுது கூடுதலாக 32 விமானங்கள் ஓமானிலிருந்து இந்தியாவில் இருக்கும் பல்வேறு நகரங்களுக்கு செல்லவிருக்கின்றன.
கூடுதலாக அறிவிக்கப்பட்ட விமானங்களில் நான்கு விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இயக்கப்பட்டதை போன்றே இந்த நான்கு விமானங்களும் சென்னைக்கே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னராக நான்காம் கட்டத்தில் இரு விமானங்கள் ஓமானில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.