துபாய் : திடீரென தீ பற்றி எறிந்த பேருந்து..!! உடனடியாக தீயினை அணைத்த தீயணைப்பு துறையினர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இன்று (ஆகஸ்ட் 17) மாலை ஒரு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழு பேருந்தும் தீக்கிரையாகிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை துபாயில் இருக்கும் பிசினஸ் பே (Business Bay) பகுதிக்கு அருகிலுள்ள அல் கைல் தெருவில் (Al Khail Street) பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பேருந்து முழுவதுமாக இருந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து துபாயின் சிவில் பாதுகாப்புக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும்,அதனை தொடர்ந்து உடனடியாக அல் கூஸ் தீ அணைப்பு நிலையத்திலிருந்து விபத்து ஏற்பட்ட இடத்தை அடைந்த தீ அணைப்பு வீரர்கள் தீயினை 9 நிமிடங்களுக்குள் முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயினை அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்தினால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeதற்பொழுது கோடை காலம் என்பதால் வழக்கமாக இது போன்ற தீ விபத்துகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக வாகனங்களில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமீரக காவல்துறையினரும் இது குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கும் வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.