ADVERTISEMENT

வரும் நாட்களில் கத்தாரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களுக்கு புக்கிங் தொடக்கம்..!! தூதரகம் தகவல்..!!

Published: 24 Aug 2020, 5:13 PM |
Updated: 24 Aug 2020, 5:17 PM |
Posted By: admin

வந்தே பாரத்தின் ஐந்தாம் கட்டத்தில் கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்பட்டுவரும் விமானங்களில் தற்போது இந்தியாவிற்கு செல்லவிருக்கும் 10 விமானங்களின் பட்டியலை கத்தார் நாட்டிற்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. கூடுதலாக இயக்கப்படவுள்ள இந்த விமானங்கள் வரும் ஆகஸ்ட் 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவிற்கு வரும் இந்த குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படவுள்ள விமானங்களில் இரண்டு விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சிக்கு செல்லவிருக்கும் இந்த விமானங்கள் கத்தார் நாட்டின் தோஹா சர்வதேச விமான நியலையத்திலிருந்து இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஆகஸ்ட் 28 ம் தேதி தோஹாவிலிருந்து புறப்படும் ஒரு விமானம் திருச்சி விமான நிலையம் சென்று, அதன் பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்றடையும் என தூதரகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று, ஆகஸ்ட் 30 ம் தேதி தோஹாவிலிருந்து புறப்படும் மற்றொரு விமானம் திருச்சி விமான நிலையம் செல்லும் எனவும் அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலே கூறப்பட்டுள்ள விமானங்களில் பயணிக்க விரும்புபவர்கள் நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திலோ அல்லது அலுவலகங்களிலோ புக்கிங் செய்து கொள்ளலாம் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT