வளைகுடா செய்திகள்
ஓமான் சுல்தான் பெயரில் புதிய நாணயங்களை வெளியிட்ட மத்திய வங்கி..!!
ஓமான் மத்திய வங்கியானது சுல்தான் ஹைதம் பின் தாரெக் அவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓமானின் சுல்தானாக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக அவரது பெயரைக் கொண்ட நாணயங்களின் தொகுப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட நாணயங்கள் 50, 25, 10 மற்றும் 5 பைசாக்களின் பிரிவுகளாகும் என்று ஓமானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய நாணயங்கள் வரும் செப்டம்பர் முதல் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கம் ஓமான் சுல்தானின் பெயரும் ஓமானின் தேசிய சின்னமும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் மற்றொரு பக்கம் நாணயத்தின் மதிப்பும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.