வளைகுடா செய்திகள்
ஓமான் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 18, 2020) : பாதிக்கப்பட்டோர் 192 பேர்..!! 9 பேர் உயிரிழப்பு..!!
ஓமானில் இன்று (ஆகஸ்ட் 18, 2020) புதிதாக 192 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 83,418 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று புதிதாக 9 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் இதனால் ஓமானில் கொரோனவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 597 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 77,977 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.