துபாய், மதுரை இடையேயான விமான சேவையை தொடங்கிய SpiceJet
கொரோனாவின் பாதிப்பினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவையினை தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளதாக இந்தியாவை சேர்ந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான நிறுவனமானது துபாயில் இருந்து இந்தியாவின் மதுரை, டெல்லி, ஜெய்ப்பூர், கோழிக்கோடு மற்றும் மும்பை ஆகிய 5 இந்திய நகரங்களுக்கு இடையே ஆகஸ்ட் 31 வரை விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த விமான நிறுவனமானது இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்க இருக்கும் பயணிகளுக்கான தகுதிகளை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்லுபடியாகும் எந்தவொரு விசாவினை வைத்திருக்கும் இந்தியர்களும் அமீரக குடிமக்களும் துபாய்க்கு வரும் விமானங்களில் பயணிக்கலாம் என தெரிவித்திருந்தது.
தற்பொழுது வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, மதுரையில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து மதுரைக்கும் நாளை (ஆகஸ்ட் 19) விமானங்களை இயக்க இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
— SpiceJet (@flyspicejet) August 14, 2020