இன்று முதல் ஓமான் நாட்டில் விதிக்கப்பட்ட லாக்டவுன் நீக்கம்..!! உச்சக்குழு அறிவிப்பு..!!
ஓமானில் இருக்கும் கோவிட் -19 தொடர்பான உச்சக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் அந்நாட்டில் இருக்கும் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்துத் தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பித்துள்ள கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலை காரணமாக ஓமான் நாடு பாதிக்கப்பட்டுள்ளதால் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்கான நடவடிக்கையை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்நாட்டில் இருக்கும் தோஃபர் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் தடையில் எந்தவொரு மாற்றம் இல்லை என்றும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் அப்பகுதியில் லாக்டவுன் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அணைத்து பகுதிகளிலும் ஆகஸ்ட் 8 ம் தேதி முதலே இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் இன்று ஊரடங்கு நேரமானது இரவு 7 மணி முதல் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணி வரையிலும் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.