டூரிஸ்ட் விசாவில் அமீரகம் பயணிக்க ICA / GDRFA ஒப்புதல் தேவை இல்லை..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் செல்ல புதிய டூரிஸ்ட் விசா பெற்று இந்தியாவிலிருந்து அமீரகம் பயணிக்கும் பயணிகளுக்கும், அல்லது அமீரக விமான நிலையம் வந்த பின்னர் வருகை விசா (Arrival Visa) பெறும் பயணிகளுக்கும், ICA அல்லது GDRFA விடமிருந்து பயணத்திற்கான முன் அனுமதி பெற தேவை இல்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய டூரிஸ்ட் விசாவில் அமீரகம் பயணம் செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களிலிருந்து பெறப்பட்ட COVID-19 நெகடிவ் ரிசல்ட் வைத்திருப்பது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்ட ஏர் பபுள் ஒப்பந்தத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமானங்கள் முலமாக, செல்லுபடியாகும் அனைத்து விதமான விசாக்களின் மூலமும் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கலாம் என இந்திய சிவில் விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் புதிய விசாக்களில் அமீரகம் பயணம் செல்ல அனுமதி உண்டா அல்லது ICA / GDRFA விடம் முன் அனுமதி ஏதேனும் பெற வேண்டுமா என்ற குழப்பம் அனைவரிடமும் நீடித்து வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, செல்லுபடியாகும் அமீரக ரெசிடன்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள், 6 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கி இருப்பவர்கள் மற்றும் மார்ச் 1 ஆம் தேதிக்கு பின்னர் காலாவதியான குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் என அனைவரும் தற்போது ICA மற்றும் GDRFA அனுமதியுடன் அமீரகம் பயணித்து வருகின்றனர்.
அபுதாபிக்கும் ஷார்ஜாவிற்கும் பயணிக்க, குடியிருப்பாளர்கள் ICA வெளியிட்டிருந்த uaeentry.ica.gov.ae என்ற வளைத்தளத்தில் தங்களின் ஆவணங்களை சரிப்பர்த்து, அதில் பச்சை நிறத்தில் “Entry Allowed” என்ற மெசேஜ் வந்தால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், துபாய் குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப GDRFA விடம் முன் அனுமதி பெற்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் துபாய் குடியிருப்பாளர்கள் தற்போது GDRFA ஒப்புதலுடன் அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்களுக்கும் பயணிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
**Tourists with valid visa or visa on arrival are not required to get any approvals from GDRFA or ICA.@HardeepSPuri @MoCA_GoI @cgidubai
— Air India Express (@FlyWithIX) August 22, 2020
#FlyWithIX : Attention Passengers to Dubai!
All Dubai-bound passengers are required to:
1. Fill the Declaration Form before arriving at Dubai and submit it before taking the PCR test.
*Copy of Declaration Form is attached below. pic.twitter.com/PYx6x71ep7
— Air India Express (@FlyWithIX) August 22, 2020