UAE : இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!
இந்தியாவின் சுதந்திர தினமான இன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து செய்திகளை இந்திய தலைவர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இந்திய ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்திற்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
அதே போன்று அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் மற்றும் அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஆகியோரும் சுதந்திர தின வாழ்த்துக்களை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இந்திய பிரதமரான நரேந்திர மோடிக்கும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.