ADVERTISEMENT

குவைத்தில் உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி..!!

Published: 4 Sep 2020, 12:38 PM |
Updated: 4 Sep 2020, 12:39 PM |
Posted By: admin

குவைத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைச்சர்களின் கவுன்சிலின் முடிவின்படி, குவைத்தில் உள்ள உணவகங்கள் 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முனிசிபாலிடியின் பொது இயக்குனர் அஹ்மத் அல் மன்ஃபூஹி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதன் மூலம் கொரோனா பரவுவதற்கு முன் உணவகங்கள் செயல்பட்டு வந்த நேரத்திலேயே இனி செயல்படலாம் என்றும் 24 மணி நேரமும் உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனியார் குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள உணவகங்கள் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, கஃபே க்களில் ஷிஷாவிற்கான தடை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவைத்தில் முக கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறும் நபர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க அனுமதிக்கும் மசோதாவை குவைத் அரசாங்கம் வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT