ADVERTISEMENT

உங்களின் புத்தாண்டு வாழ்த்து உலகின் மிக உயர்ந்த “புர்ஜ் கலீஃபா” கட்டிடத்தில் தெரிய வேண்டுமா..!! உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!!

Published: 8 Dec 2020, 5:24 PM |
Updated: 8 Dec 2020, 5:32 PM |
Posted By: admin

நடப்பு ஆண்டு 2020 முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் உலகின் பல பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளன. 2020 ம் ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று நோய் காரணமாக உலகம் முழுவதும் பல சிக்கல்களை கடந்து வந்த நிலையில் வரும் புதிய ஆண்டில் கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த தொற்றுநோயிலிருந்து அனைவரையும் பாதுகாக்க உலக நாடுகள் அனைத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

புது வருடம் பிறக்கும் ஒவ்வொரு வருடமும் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் லேசர் விளக்குகளாலும், வானவேடிக்கைகளாலும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மேலும் அந்நாளில் அந்த கட்டிடத்தில் இருக்கும் திரையில் புத்தாண்டு வாழ்த்துக்களும் காணொளிகளும் இடம்பெறும்.

தற்போது வரவிருக்கும் 2021 ம் ஆண்டு கொண்டாடத்திலும் சிறந்த முறையில் வாழ்த்துக்களை கூறும் பொதுமக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் புத்தாண்டு வாழ்த்துகள் புர்ஜ் கலீஃபா திரையில் உலகிற்கு காட்சிப்படுத்தப்பட்ட இருக்கிறது.

ADVERTISEMENT

இது குறித்து புர்ஜ் கலீஃபாவின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள, 2021 ஆம் ஆண்டிற்கான உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் விருப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் அதில் இடம்பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் அதன் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள ட்வீட்டின் கமெண்ட்டில் சென்று அதிகபட்சம் 35 எழுத்துக்களை கொண்டு சிறந்த முறையில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நபர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளின் வாழ்த்து செய்தி அதன் மிக உயர்ந்த திரையில் உலகிற்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT