அமீரக செய்திகள்

“உலகின் சிறந்த விமான நிறுவனம்” என தொடர்ச்சியாக எட்டாவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!!

துபாயை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தொடர்ச்சியாக எட்டாவது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘பிசினஸ் டிராவலர் மிடில் ஈஸ்ட் அவார்ட்ஸ் 2021’ (Business Traveller Middle East awards) என்ற அமைப்பின் மூலம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாக இந்த வருடமும் உலகளவில் சிறந்த விமான நிறுவனம்’ என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ‘ஏர்லைன்ஸ் வித் தி பெஸ்ட் ஃபர்ஸ்ட் கிளாஸ்’, மற்றும் ‘ஏர்லைன்ஸ் வித் பெஸ்ட் எகனாமி கிளாஸ்’ ஆகியவற்றுக்கான கவுரவங்களையும் பெற்றது.

தற்போது நிலவி வரும் கோவிட் -19 சவாலுக்கு மத்தியில், பாதுகாப்பான, தொடர்பு இல்லாத (touchless) பயண அனுபவத்திற்காக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து, அதன் பயோமெட்ரிக் பாதை (biometric path) மற்றும் டச்லெஸ் செக்-இன் (touchless check-in) ஆகியவற்றை அளவிடுவதன் மூலம் விமானத்தில் பயணிப்போர்களின் விமான பயண அனுபவத்தை எமிரேட்ஸ் நவீனப்படுத்தியுள்ளது.

செக்-இன் முதல் கேட் (gate) வரை, வாடிக்கையாளர்களுக்கு 33 க்கும் மேற்பட்ட எமிரேட்ஸ் பயோமெட்ரிக் சோதனைச் சாவடிகள் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) முழுவதும் 50 டச்லெஸ் கியோஸ்க்கள் (touchless kiosks) என விமான பயணத்தின் நவீனத்தை அனுபவிக்க பலவிதமான தேர்வுகள் உள்ளன.

மேலும், தடுப்பூசி பதிவுகள் மற்றும் PCR சோதனை முடிவுகள் போன்ற கோவிட் -19 தொடர்பான மருத்துவ ஆவணங்களை தரப்படுத்த தொழில்துறை அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் பயணத்தை எளிதாக்குவதற்கும் கட்டுப்பாடுகளை குறைப்பதற்கும் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் IATA டிராவல் பாஸ் (IATA travel pass) எனும் புதிய பயண நடைமுறையை முயற்சிக்கத் தொடங்கியது. இந்த புதிய நடைமுறையானது மே மாத இறுதிக்குள் அதன் அனைத்து விமானங்களுக்கும் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

IATA டிராவல் பாஸ் பற்றிய முழு விபரங்கள்..

கோவிட் -19 தொடர்பான மருத்துவ பதிவுகளின் டிஜிட்டல் சரிபார்ப்புக்காக விமான நிறுவனம் துபாய் சுகாதார ஆணையத்துடன் (DHA) ஒப்பந்தம் செய்துள்ளது, மேலும் செக்-இன் கவுண்டர்களில் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் காகிதமற்ற (paperless) அனுபவத்தை வழங்குகிறது.

பிசினஸ் டிராவலர் மிடில் ஈஸ்ட் விருதுகள் வணிக பயணங்கள் தொடர்பாக வழங்கப்பட்டு வரும் விருதுகள் ஆகும். இது, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள் போன்ற தொழில்துறையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இந்த வருடத்திற்கான விருதுகள் விர்ச்சுவல் முறையில் வழங்கப்பட்டன மற்றும் இந்நிகழ்வில் அரேபிய வளைகுடா பிராந்தியத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!