அமீரக செய்திகள்

இடி, கனமழை, ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு.. அபுதாபியில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நிலையற்ற வானிலைக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தலைநகரான அபுதாபியில் வரும் மே 5 வரை இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

வானிலை துறை கணிப்புகளின்படி, புதன் இரவுக்குள் மேற்கிலிருந்து சீரற்ற வானிலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது வியாழன் அன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவி, மேற்கு, கடலோர மற்றும் சில கிழக்குப் பகுதிகளை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இதனால் வெப்பநிலையும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு முன் பெய்த கனமழையை போன்றல்லாமல் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

அபுதாபி

அபுதாபியை பொறுத்தவரை மே 2, வியாழன் வரை குறிப்பிட்ட பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சில நேரங்களில் வலுவான மற்றும் தூசி நிறைந்த காற்று வீசுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அல் அய்ன்

இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு, சில நேரங்களில் சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை, அத்துடன் அவ்வப்போது வலுவான மற்றும் தூசி நிறைந்த காற்று வீசும் வானிலையானது மே 2 வியாழன் வரை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மே 3 வெள்ளி முதல் மே 5 ஞாயிறு வரையிலான நாட்களில் பகுதிகள் தெற்கு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் தஃப்ரா

இடி மற்றும் மின்னலுடன் கூடிய பல்வேறு தீவிரம் கொண்ட மழை, சில நேரங்களில் சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை, அத்துடன் அவ்வப்போது வலுவான மற்றும் தூசி நிறைந்த காற்று மே 2 வியாழன் வரை இருக்கும் என்றும் மே 3 வெள்ளி முதல் மே 5 ஞாயிறு வரை தெற்குப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!