ADVERTISEMENT

UAE: மீண்டும் தொடங்கும் பயணிகள் விமான சேவை.. அமீரகத்திற்கு வர ICA ஒப்புதல் கட்டாயம்..!!

Published: 3 Aug 2021, 2:10 PM |
Updated: 3 Aug 2021, 2:35 PM |
Posted By: admin

இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்திடம் (ICA) இருந்து அவர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஒப்புதலை ICA இணையதளத்தில் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா வைரஸிற்கான இரண்டாவது தடுப்பூசி டோஸைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

UAE: ஆகஸ்ட் 5 முதல் இந்தியா, இலங்கை நாடுகளிலிருந்து பயணிகள் அமீரகம் வர அனுமதி..!! NCEMA அறிவிப்பு..!!

அத்துடன் அமீரகம் வரும்போது பயணிகள் தங்களின் தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறையான முடிவை வைத்திருக்க வேண்டும் மற்றும் அதற்கான சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன் ரேபிட் கோவிட் சோதனை நடத்தப்படும். அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கும்போது ஒரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.