ADVERTISEMENT

துபாய்: 80 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி அளிக்கும் CBBC -ன் அதிரடி விற்பனை..!!

Published: 26 Sep 2021, 4:21 PM |
Updated: 26 Sep 2021, 4:24 PM |
Posted By: admin

வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களில் அதிரடி தள்ளுபடியை அளிக்கக்கூடிய CBBC தனது பிக் கிளியரன்ஸ் விற்பனையை மீண்டும் துவங்கியுள்ளது.

ADVERTISEMENT

துபாய் உலக வர்த்தக மையம் Zabeel Hall 3 ல் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி, 300 க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் சூப்பர் டீல்கள் மற்றும் சிறந்த தள்ளுபடிகளை வழங்கவிருக்கின்றது CBBC கிளியரன்ஸ் விற்பனை.

இதில் வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மிகப்பெரிய பிராண்டுகளை ஒரே இடத்தின் கீழ் கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கான்செப்ட் பிராண்ட்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் விஜய் சம்யானி கூறினார்: “எங்கள் அன்பான வாடிக்கையாளர்களிடமிருந்து CBBC-க்கு பெரும் வரவேற்பு இருந்தது. எங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் பேரில் CBBC கிளியரன்ஸ் விற்பனை மீண்டும் வந்துள்ளது, இந்த முறை நாங்கள் இன்னும் பலவகையான பிராண்டுகளை அவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்தோம்.” என தெரிவித்துள்ளார்.

Lacoste, Fila, Mont Blanc, Armani, Lifestyle, Supreme, Tom Ford, Rayban, CK, Vince Camuto, Paris Hilton, Anta, Skechers மற்றும் இன்னும் பல பிராண்டுகளின் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

CBBC கிளியரன்ஸ் விற்பனை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை துபாய் உலக வர்த்தக மையத்தில், ஜபீல் ஹால் 3 காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு 0528212809 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.