ADVERTISEMENT

அக்டோபர் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை வெளியிட்ட அமீரகம்..!!

Published: 29 Sep 2021, 7:39 AM |
Updated: 29 Sep 2021, 7:42 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தினை ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.55 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் அக்டோபர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.60 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.44 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் அக்டோபர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.49 திர்ஹமாக சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • டீசல் : செப்டம்பர் மாதத்தில் 2.38 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் அக்டோபர் மாதம் முதல் லிட்டருக்கு 2.51 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.