ADVERTISEMENT

அமீரகத்தில் செயல்பட தொடங்கிய இலவச வாட்ஸ்அப் கால்..!! தடையை நீக்கிய அமீரக அரசு..!!

Published: 30 Sep 2021, 2:04 AM |
Updated: 30 Sep 2021, 5:27 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இணைய வழி இலவச அழைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமீரகத்தில் உள்ள சில ஸ்மார்ட்போன் பயனர்கள் வாட்ஸ்அப், ஸ்கைப் மற்றும் பிற இணைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடிந்ததாக ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பத்திரிக்கையாளர்கள் சிலரும் இதனை சரிபார்க்க முயன்றபோது, ​​அவர்களும் சிரமமின்றி வாட்ஸ்அப்பில் தொலைபேசி அழைப்பைச் செய்ய முடிந்தது என்றும் அழைப்பு தெளிவாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) சேவைகள் மூலம் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வதற்கு அமீரகத்தில் கடந்த சில வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பாளர்கள் ஆன்லைனில் தொலைபேசி அழைப்புகளைச் செய்ய Botim போன்ற கட்டண அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இருப்பினும், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஜூம் மற்றும் ஸ்கைப் ஃபார் பிசினஸ்ஸ் ஆகிய அப்ளிகேஷன் தொலைதூர வேலை மற்றும் கற்றலை செயல்படுத்த பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்டைம் போன்ற சில VoIP சேவைகளின் தடையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று அமீரக அரசாங்கத்தின் இணையப் பாதுகாப்புத் தலைவர் முன்னரே தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஜூம் மற்றும் ஸ்கைப் ஃபார் பிசினஸ்ஸ் போன்று தற்போது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்டைம் மூலமாகவும் இலவச அழைப்புகளை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிலருக்கு வாட்ஸ்அப் கால் செயல்பட தொடங்கியுள்ளது.

இருப்பினும் எக்ஸ்போ 2020 பார்வையாளர்களுக்காகவே இந்த இலவச அழைப்புகள் மீதான தடையை அமீரக அரசு நீக்கியிருப்பதாகவும், எக்ஸ்போ தளத்திலிருந்து வாட்ஸ்அப் கால் மூலம் இலவச அழைப்புகள் மேற்கொள்ள முடிந்ததாகவும் ஆங்கில செய்தி ஊடகம் ரியூட்டர்ஸ் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.