அமீரக செய்திகள்

மீலாது நபி விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..!!

அமீரகத்தில் அக்டோபர் 21 வியாழக்கிழமை மீலாது நபியை முன்னிட்டு பொது விடுமுறை என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்த பொது விடுமுறையை முன்னிட்டு ஷார்ஜாவில் வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முடிவு வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறைகள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டணம் செலுத்தக்கூடிய பார்க்கிங் மண்டலங்களை தவிர்த்து மற்ற அனைத்து பார்க்கிங்கிற்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் பகுதிகள் நீல நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் அல் ஹிஸ்ன் ஸ்ட்ரீட் (பேங்க் காம்ப்ளக்ஸ்), அல் ஷுவைஹீன், அல் ஷோயுக் கார்னிச் ஸ்ட்ரீட், கெய்ஸ் இப்னு அபி சாசா ஸ்ட்ரீட், அல் ஜூபைல், சென்ட்ரல் சூக், அல் மஜாஸ் 1, கார்னிச் ஸ்ட்ரீட் (காலித் லகூன் பகுதி), மஜாஸ் 1, மஜாஸ் 2, யுனிவர்சிட்டி சிட்டி சாலை, மற்றும் முவைலே வணிக பகுதி தவிர அனைத்துப் பகுதிகளிலும் இலவச பார்க்கிங் வசதிகளைப் பெறலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய பார்க்கிங் இடங்களை ஆணையம் ஆய்வு செய்யும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் “இலவச பார்க்கிங் திட்டத்திற்கு விலக்கப்பட்ட பகுதிகள் ஒரு ஆய்வின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. பொது விடுமுறை நாட்களில் இந்த பகுதிகளில் பல பார்க்கிங் மீறல்களை கள ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!