அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடர்ந்து 150 க்கு கீழ் பதிவாகி வரும் கொரோனா தொற்று..!!

அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 10, 2021) புதிதாக 111 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 737,766 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் உயிரிழக்கவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,113 ஆக இருக்கின்றது.

இன்றைய நாளில் மட்டும் 191 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 731,113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!