ADVERTISEMENT

அமீரகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா தொற்று..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!

Published: 14 Oct 2021, 2:53 PM |
Updated: 14 Oct 2021, 3:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு அரசும் குறிப்பிட்ட பொது இடங்களுக்கு முக கவசம் கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்குமாறும் அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 14, 2021) புதிதாக 116 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 738,268 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,117 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 173 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 731,805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT