ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில மாதங்களாகவே குறைவான கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில், தற்பொழுது இந்த வருடத்திலேயே மிக குறைவான எண்ணிக்கையில் நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.
அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17, 2021) புதிதாக 99 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 738,586 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,120 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய நாளில் மட்டும் 153 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 732,296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.