ADVERTISEMENT

UAE: பார்க்கிங் மற்றும் டோல் கட்டணத்தில் இருந்து விலக்கு..!! தேசிய தின விடுமுறையை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி..!!

Published: 30 Nov 2021, 1:42 AM |
Updated: 30 Nov 2021, 4:59 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் வசிப்பவர்கள் புதன்கிழமை (டிசம்பர் 1) முதல் தேசிய தின விடுமுறை நாட்கள் முழுவதும் தங்கள் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது பற்றி அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தியாகிகள் நினைவு தினம் (டிசம்பர் 1) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினத்திற்கான (டிசம்பர் 2) விடுமுறையின் போது வாகன நிறுத்தம் இலவசம் என்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 4, 2021 சனிக்கிழமை காலை 7.59 மணி முதல் கட்டண வாகன நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்ற வசதி அபுதாபி சிட்டியின் புறநகரில் அமைந்துள்ள முசாஃபா தொழில்துறை பகுதியின் வாகன நிறுத்துமிடம் அல்லது M18 க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியிலும் வரும் விடுமுறை நாட்களில் வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேசிய தின விடுமுறையின் போது குடியிருப்பாளர்கள் மவாக்கிஃப் விதிமுறைகளை கடைபிடிக்குமாறும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தவோ அல்லது விடுமுறை நாட்களில் சீரான போக்குவரத்தை தடுக்கவோ கூடாது என்றும் ICT பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வாகனம் நிறுத்தும் இடங்கள் (residence parking area) என குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான அபராதம் 200 திர்ஹம் மற்றும் விதிமீறலுக்காக டிக்கெட் வழங்கப்பட்ட பிறகு, தவறாக நிறுத்தம் செய்யப்பட்ட வாகன ஓட்டிகளின் கார் ICT அதிகாரிகளால் கொண்டு செல்லப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டார்ப் டோல் கேட்

தேசிய தின விடுமுறை நாட்களில் டார்ப் டோல் கேட் அமைப்பு (Darb toll gate) இலவசமாக வழங்கப்படும் என்று ITC அறிவித்துள்ளது. விடுமுறைகள் முடிந்த பிறகு வரும் சனிக்கிழமை (டிசம்பர் 4) முதல், பீக் ஹவரில் போக்குவரத்து சீராக செல்வதை உறுதி செய்வதற்காக, காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை என சனி முதல் வியாழன் வரையிலும் சாதாரண டோல்கேட் கட்டணங்கள் மீண்டும் தொடங்கும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள் 

அனைத்து வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்களும் (customer happiness center) தேசிய தின விடுமுறை நாட்களில் மூடப்பட்டு, அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கும்.

பேருந்து சேவைகள்

பொதுப் பேருந்து சேவையானது வெள்ளிக்கிழமை மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களின் போது பின்பற்றப்படும் வழக்கமான நேரங்களையே பின்பற்றி தேசிய தின விடுமுறை நாட்களில் இயங்கும்.

ஃபெர்ரி சேவைகள்

டல்மா ஐலேண்ட் மற்றும் ஜெபல் அல் தன்னா துறைமுகம் மற்றும் அல் சாதியாத் ஐலேண்ட் மற்றும் அல் அலியா இடையே ஃபெர்ரி சேவைகள் செயல்படும்.

மேலும் அனைத்து சேவைகளையும் www.itc.gov.ae என்ற ITC இன் இணையதளத்தில் அணுகலாம் என்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி மையங்களை 80088888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.