ADVERTISEMENT

துபாய்: தேசிய தினத்தையொட்டி பார்க்கிங் இலவசம்… மெட்ரோ, பேருந்து, டிராம் செயல்படும் நேரங்களில் மாற்றம்..!! RTA தகவல்..!!

Published: 28 Nov 2021, 4:16 PM |
Updated: 28 Nov 2021, 4:22 PM |
Posted By: admin

துபாயில் உள்ள அதிகாரிகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின விடுமுறைக்காக துபாய் முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மல்டி-லெவல் பார்க்கிங் டெர்மினல்கள் தவிர, டிசம்பர் 1 புதன்கிழமை முதல் டிசம்பர் 3 வெள்ளி வரை மற்ற அனைத்து இடங்களிலும் பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்கிங் கட்டணம் டிசம்பர் 4 சனிக்கிழமையன்று மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் பொது பேருந்துகள், துபாய் மெட்ரோ மற்றும் டிராம் ஆகியவற்றிற்கான திருத்தப்பட்ட சேவை நேரங்களையும் RTA அறிவித்துள்ளது.

துபாய் மெட்ரோ

துபாய் மெட்ரோ டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில், மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன்கள் காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.15 மணி வரை செயல்படும்.

ADVERTISEMENT

டிராம்

துபாய் டிராம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சேவையில் இருக்கும்.

பேருந்துகள்

கோல்ட் சூக் ஸ்டேஷன் உட்பட முக்கிய நிலையங்கள் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 1.22 வரை திறந்திருக்கும்.

அல் குபைபா நிலையம் அதிகாலை 4.13 முதல் நள்ளிரவு 12.57 வரை செயல்படும்.

சத்வா நிலையம் உள்ளிட்ட துணை நிலையங்களில், காலை 4.57 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை இயங்கும்.

C01 ரூட் மட்டும் 24 மணி நேரமும் இயங்கும்.

அல் குசைஸ் பேருந்து நிலையம் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.04 வரை சேவையில் இருக்கும்

அல் கூஸ் தொழில் நிலையம் காலை 5.30 முதல் இரவு 11.30 வரை இயங்கும்

ஜெபல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் நள்ளிரவு 12.15 வரை இயங்கும்

நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள்

அல் குபைபா போன்ற துணை நிலையங்கள், காலை 6.40 முதல் இரவு 10.20 வரை இயங்கும்

யூனியன் ஸ்கொயர் காலை 4.25 முதல் 12.15 வரை செயல்படும்

தேரா சிட்டி சென்டர் காலை 6.40 முதல் இரவு 11:30 வரை இயங்கும்

அல் சப்கா காலை 6.30 முதல் இரவு 10.30 வரை;

எடிசலாட் மெட்ரோ நிலையம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை;

அபு ஹைல் மெட்ரோ நிலையம் காலை 6.30 முதல் இரவு 10.35 வரை;

ஹத்தா நிலையம் காலை 5.30 முதல் இரவு 9.30 வரை இயங்கும்.