ADVERTISEMENT

UAE: தனியார் துறை தொழிலாளர்களுக்கு நற்செய்தி..!! குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அமீரக அரசு..!!

Published: 17 Nov 2021, 12:07 PM |
Updated: 17 Nov 2021, 12:09 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2, 2022 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தில், ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று பரந்த அளவிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்தும் 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33 இன் பிரிவு 27 ன் படி, மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சரின் முன்மொழிவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து குறைந்த பட்ச ஊதியம் அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆணை சட்டம், 1980 இன் தொழிலாளர் சட்ட எண் 8 ன் மிக முக்கியமான திருத்தமாக திங்களன்று அறிவிக்கப்பட்டது. கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் தனியார் துறையின் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து இந்த புதிய வரைவு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார், புதிய சட்டம் தொடர்ந்து மாறிவரும் நவீன உலகத்தை சமாளிக்கும் வகையில் தொழிலாளர் சந்தையை உருவாக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழிலாளர் உரிமைகளை வழங்கவும், உலகம் முழுவதும் உள்ள திறமைகள் மற்றும் திறன்களை ஈர்க்கவும் ஏற்ற வகையில் இந்த சட்டம் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT