ADVERTISEMENT

வீடியோ: அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று பெய்த மழை…

Published: 19 Nov 2021, 1:51 PM |
Updated: 19 Nov 2021, 1:54 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர் காலம் ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து பல பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து சமூக ஊடகங்களில் வாகன ஓட்டிகள் மழை பெய்த பின்னர் ஈரமான சாலைகளில் செல்வதையும், சாலைகளில் தெரிவு திறன் (visibility) குறைவாக இருப்பதையும் பதிவு செய்து காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.

இன்று முன்னதாக, கிளவுட் சீடிங் (cloud seeding) காரணமாக வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) குடியிருப்பாளர்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமாவின் பகுதிகளிலும், கந்தூத், அல் மர்ஜான் மற்றும் அல் தைத், ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் அல் இதிஹாத் சாலையிலும் மழை பதிவாகியுள்ளது.

 

ADVERTISEMENT