ADVERTISEMENT

தேசிய தின கொண்டாட்டம்: அமீரகம் முழுவதும் நடைபெற உள்ள வான வேடிக்கைகளின் முழு விபரங்கள்..!!

Published: 1 Dec 2021, 1:15 PM |
Updated: 1 Dec 2021, 1:15 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் தனது பொன்விழாவை டிசம்பர் 2 அன்று பிரம்மாண்டமாக கொண்டாடவிருக்கின்றது. இதனையொட்டி நாட்டின் 15 பிரபலமான இடங்களில் திகைப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அவற்றின் முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ஐந்து இடங்களில் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

அவற்றில் அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT அபுதாபி) டிசம்பர் 2 ஆம் தேதி அபுதாபியின் கார்னிச், அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதிகளில் வானவேடிக்கைகளின் கண்கவர் காட்சியை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு அல் மரியா ஐலேண்டில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இந்த நிகழ்ச்சி இரவு 9 மணிக்குத் தொடங்கும்.

டிசம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பவாபத் அல் ஷர்க் மாலிலும் (Bawabat Al Sharq Mall) வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன.

ADVERTISEMENT

துபாய்

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அமீரகத்தின் 50வது ஆண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு துபாயின் பிரபலமான ஆறு இடங்களில் வானவேடிக்கைகளைக் கண்டு களிக்கலாம்.

டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் The Pointe மற்றும் Atlantis at The Palm, ப்ளூவாட்டர்ஸ், ஜுமேரா கடற்கரையில் சன்செட் மாலுக்குப் பின் இருக்கும் எடிசலாட் பீச் கேண்டீன், லா மெர் (la mer) மற்றும் புர்ஜ் அல் அரப் ஆகிய இடங்களில் இரவு 8, 8.30 மற்றும் 9 மணிக்கு வானவேடிக்கைகள் நிகழும்.

குளோபல் வில்லேஜ்

குளோபல் வில்லேஜ் ஐக்கிய அரபு அமீரக கொடியின் வண்ணங்களில் திகைப்பூட்டும் மற்றும் பாரம்பரிய இசை வான வேடிக்கைகளுடன் டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு தேசிய தினத்தை கொண்டாடவிருக்கின்றது.

எக்ஸ்போ 2020

50 வது ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஒளிரும் எக்ஸ்போ 2020 துபாய் தேசிய தின விடுமுறை நாட்களில் கண்கவர் நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளது. நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 150 கலைஞர்களுடன் வானவேடிக்கை மற்றும் பல நிகழ்ச்சிகள் டிசம்பர் 1 முதல் பார்வையாளர்களை மகிழ்விக்க எக்ஸ்போ ஏற்பாடு செய்துள்ளது. இரவு 8 மணிக்கு அல் வாசல் அவென்யூவில் காட்சிகள் நடைபெறும்.

ஷேக் சையத் ஃபெஸ்டிவல்

நாட்டின் 50வது தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அல் வத்பாவில் நடைபெறும் ஷேக் சையத் ஃபெஸ்டிவலில், டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வான வேடிக்கை, ட்ரோன் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் 18 நிமிட ட்ரோன் ஷோ இருக்கும். அதைத் தொடர்ந்து ஒரு அற்புதமான 10 நிமிட வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.

ஹத்தா டேம்

தேசிய தின விழாவை முன்னிட்டு ஹத்தாவிலும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. இது முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு புதுவித ட்ரோன் ஷோ மற்றும் வான வேடிக்கைகளை நிகழ்த்தவிருக்கின்றது.