ADVERTISEMENT

துபாய்: புத்தாண்டையொட்டி வாகன ஓட்டிகள் 2 நாட்கள் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ள வாய்ப்பு…!!

Published: 29 Dec 2021, 1:15 PM |
Updated: 29 Dec 2021, 1:25 PM |
Posted By: admin

துபாயில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் இருக்கும் மல்டி-லெவல் டெர்மினல்களைத் தவிர, மற்ற அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களிலும் வாகன ஓட்டிகள் ஜனவரி 1 சனிக்கிழமையன்று இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் டிசம்பர் 31 வெள்ளிக்கிழமையில் வருவதால், அது விடுமுறை நாளாக இருப்பதையொட்டி அன்றும் வாகன ஓட்டிகள் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதன்மூலம் துபாயில் வசிப்பவர்கள் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு தங்கள் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.