ADVERTISEMENT

அமீரகம் இதுவரை கண்டிராத 95 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை அறிவித்த எமிரேட்ஸ் டிரா… வெல்லப் போவது யார்…??

Published: 20 Dec 2021, 9:44 AM |
Updated: 21 Dec 2021, 9:31 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய டிராவான எமிரேட்ஸ் டிரா அதன் வெற்றியாளருக்கான பரிசை 77,777,777 திர்ஹமில் இருந்து 89 மில்லியன் திர்ஹமாக உயர்த்தி டிசம்பர் 18 ஆம் தேதி ராஃபிள் டிரா நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது டிசம்பர் 25 ம் தேதி நடைபெறவுள்ள டிராவில் இந்த பரிசுத்தொகையானது 95 மில்லியன் திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த எமிரேட்ஸ் முதன் முதலில் வெல்பவருக்கு 77 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை என்று இருந்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக 83 மில்லியன் திர்ஹமாக அறிவிக்கப்பட்டது. பின் கடந்த வாரம் 89 மில்லியன் திர்ஹமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது பரிசுத்தொகை மேலும் உயர்த்தப்பட்டு 95 திர்ஹம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமீரகத்தின் மிகப்பெரிய டிராவின் பரிசுத்தொகையானது தற்பொழுது முந்தையதை விடவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வலது பக்கத்தில் இருந்து தொடங்கி இடது பக்கமாக டிராவிற்கான ஏழு எண்களையும் சரியான வரிசையில் பொருத்தும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர், இந்த சனிக்கிழமையன்று 95 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற புதிய பெரும் பரிசுத்தொகையை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார். மேலும் அதன் வரிசையில் ஏழுக்கும் குறைவான பொருத்த எண்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி பங்கேற்பது?

>> பங்கேற்பாளர்கள் www.emiratesdraw.com இல் ஒரு 50 திர்ஹம் பென்சில் அல்லது Coral Polyp ஐ வாங்குவதன் மூலம் வாராந்திர டிராவில் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

>> ஆன்லைனில் பதிவு செய்தவுடன் பங்கேற்பாளர்கள் தங்களின் ஏழு இலக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கணினி அவர்களுக்கான எண்ணைத் தோராயமாகத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒவ்வொரு பங்கேற்பாளரின் எண்ணும் லாக் செய்யப்பட்டு விடும். அதே எண்ணை வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது.

>> இந்த டிராவில் பங்கேற்பாளர்கள் இரண்டு தனித்தனி டிராவின் மூலமாக பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறலாம்.

>> முதலாவது ஒரு ரேஃபிள் டிரா ஆகும். அங்கு ஒவ்வொரு வாரமும், ஏழு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்களுக்கு தலா 77,777 திர்ஹம்கள் அளிக்கப்படும்.

>> இரண்டாவதாக, அனைத்து பங்கேற்பாளர்களும் ஆறு பரிசுப் பிரிவுகளுடன் கூடிய இரண்டாவது டிராவில் பங்கு பெறுவார்கள். இதில் ஏழு எண்களும் பொருந்தினால், அந்த அதிர்ஷ்டசாலிக்கு 95 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை முதல் பரிசாக வழங்கப்படும்.

இந்த மிகப்பெரிய டிராவானது www.emiratesdraw.com மற்றும் நிறுவனத்தின் YouTube மற்றும் Facebook சேனல்கள் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த எண்ணை முன்கூட்டியே பதிவு செய்யுமாறும், மேலும் தகவலுக்கு 800 77 777 777 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.