ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட் டிராவில் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்…!!

Published: 4 Dec 2021, 2:06 PM |
Updated: 4 Dec 2021, 2:13 PM |
Posted By: admin

அபுதாபியில் இந்த மாதம் நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் ஓமானில் வசித்து வந்த இந்தியர் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கேரளாவைச் சேர்ந்த ரஞ்சித் வேணுகோபாலன் உன்னிதன் என்ற 42 வயதான நபர் தனது இரண்டாவது முயற்சியிலேயே டிக்கெட் எண் 052706 உடன் பிக் டிக்கெட்டை வென்றிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த 12 வருடங்களாக ஓமனில் இருக்கிறேன். ஆனால் நான் எனது முதல் பிக் டிக்கெட்டை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். நானும் என் நண்பர்கள் சிலரும் பணத்தை சேர்த்து அந்த டிக்கெட்டை வாங்கினோம். ஆனால் எங்களுக்கு அப்போது அதிர்ஷ்டம் கிட்டவில்லை. பின்னர் 2021 ம் ஆண்டு எனக்கு அதிர்ஷ்டமானதா இல்லையா என்பதைப் பார்க்க இரண்டாவது முறை முயற்சிக்க நினைத்தேன். இதில் நான் வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இவர் இந்த டிக்கெட்டை வாங்குவதற்கு பங்களித்த ஆறு நண்பர்களுடன் அவர் தனது பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

பிக் டிக்கெட்டில் அடுத்த மாதம் 3 ம் தேதி ரேஃபிளில் வெல்பவருக்கு 25 திர்ஹம் பரிசு கிடைக்கும் என பிக் டிக்கெட் குழு அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை ஆன்லைனில் www.bigticket.ae என்ற வலைதளம் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT