ADVERTISEMENT

அமீரகத்தில் நடக்கும் மிகப்பெரிய டிரா.. 83 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை.. எப்படி பங்கு பெறுவது..??

Published: 7 Dec 2021, 4:26 PM |
Updated: 7 Dec 2021, 5:05 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய டிராவான எமிரேட்ஸ் டிரா அதன் வெற்றியாளருக்கான பரிசை தற்போதைய 77,777,777 திர்ஹமில் இருந்து 83 மில்லியன் திர்ஹமாக டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டிராவிற்காக அதிகரித்துள்ளது. இதனால் அமீரகத்தின் மிகப்பெரிய டிராவின் பரிசுத்தொகையானது தற்பொழுது முந்தையதை விடவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வலது பக்கத்தில் இருந்து தொடங்கி இடது பக்கமாக டிராவிற்கான ஏழு எண்களையும் சரியான வரிசையில் பொருத்தும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர், இந்த சனிக்கிழமையன்று 83 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற புதிய பெரும் பரிசுத்தொகையை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார். மேலும் அதன் வரிசையில் ஏழுக்கும் குறைவான பொருத்த எண்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி பங்கேற்பது?

>> பங்கேற்பாளர்கள் www.emiratesdraw.com இல் ஒரு 50 திர்ஹம் பென்சில் அல்லது Coral Polyp ஐ வாங்குவதன் மூலம் வாராந்திர டிராவில் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

>> ஆன்லைனில் பதிவு செய்தவுடன் பங்கேற்பாளர்கள் தங்களின் ஏழு இலக்க எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கணினி அவர்களுக்கான எண்ணைத் தோராயமாகத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒவ்வொரு பங்கேற்பாளரின் எண்ணும் லாக் செய்யப்பட்டு விடும். அதே எண்ணை வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது.

>> இந்த டிராவில் பங்கேற்பாளர்கள் இரண்டு தனித்தனி டிராவின் மூலமாக பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறலாம்.

ADVERTISEMENT

>> முதலாவது ஒரு ரேஃபிள் டிரா ஆகும். அங்கு ஒவ்வொரு வாரமும், ஏழு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்களுக்கு தலா 77,777 திர்ஹம்கள் அளிக்கப்படும்.

>> இரண்டாவதாக, அனைத்து பங்கேற்பாளர்களும் ஆறு பரிசுப் பிரிவுகளுடன் கூடிய இரண்டாவது டிராவில் பங்கு பெறுவார்கள். இதில் ஏழு எண்களும் பொருந்தினால், அந்த அதிர்ஷ்டசாலுக்கு 83 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை முதல் பரிசாக வழங்கப்படும்.

இந்த மிகப்பெரிய டிராவானது www.emiratesdraw.com மற்றும் நிறுவனத்தின் YouTube மற்றும் Facebook சேனல்கள் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த எண்ணை முன்கூட்டியே பதிவு செய்யுமாறும், மேலும் தகவலுக்கு 800 77 777 777 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.