ADVERTISEMENT

துபாயில் புத்தாண்டு: மெட்ரோ, பேருந்து, டிராம் செயல்படும் கால அட்டவணை வெளியீடு…

Published: 29 Dec 2021, 2:34 PM |
Updated: 29 Dec 2021, 3:56 PM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புத்தாண்டை முன்னிட்டு பொது போக்குவரத்து வழிமுறைகள் மற்றும் அதன் பிற சேவைகளுக்கான நேரத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் அனைவரும் கொரோனாவிற்காட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்குமாறும், முக கவசத்தை முழு நேரமும் அணியுமாறும் RTA கேட்டுக்கொண்டுள்ளது.

துபாய் மெட்ரோ

துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன் புத்தாண்டு கொண்டாடப்படும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தினங்களில் முழு நேரமும் செயல்படும்.

ADVERTISEMENT

டிசம்பர் 31, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தனது மெட்ரோ சேவைகளை தொடங்கி, ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 2.15 மணி வரை இடைவேளையின்றி இயங்கும்.

பின் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.15 மணி வரை மெட்ரோ இயக்கப்படும்.

ADVERTISEMENT

துபாய் டிராம்

இது வெள்ளிக்கிழமை, டிசம்பர் 31, காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை இடைவேளையின்றி சேவையில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை, டிராம் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சேவையில் இருக்கும்.

பேருந்துகள்

>> கோல்ட் சூக் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் அதிகாலை 4.50 மணி முதல் நள்ளிரவு 1.22 மணி வரை செயல்படும்.

>> அல் குபைபா நிலையம் அதிகாலை 4.26 முதல் 12.57 வரை செயல்படும்.

>> சத்வா உள்ளிட்ட துணை நிலையங்களில், பேருந்துகள் அதிகாலை 4.45 மணி முதல் இரவு 11.50 மணி வரை இயங்கும். ரூட் C01 மட்டும் 24 மணி நேரமும் இயக்கப்படும்.

>> அல் குசைஸ் பேருந்து நிலையம் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.04 வரை சேவையில் இருக்கும்.

>> அல் கூஸ் தொழில் நிலையம் அதிகாலை 5.02 முதல் இரவு 11.30 வரை இயங்கும்

>> ஜெபல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் இரவு 11.47 வரை இயங்கும்.

நகரங்களுக்கு இடையேயான பேருந்துகள் 

அல் குபைபா போன்ற முக்கிய நிலையங்கள் காலை 6.40 மணி முதல் இரவு 10.20 மணி வரை செயல்படும்

யூனியன் ஸ்கொயர் காலை 4.25 முதல் நள்ளிரவு 12.15 வரை இயங்கும்

தேரா சிட்டி சென்டர் காலை 6.40 முதல் இரவு 11.30 வரை செயல்படும்

அல் சப்கா காலை 6.30 முதல் இரவு 10.30 வரை இயங்கும்

எடிசலாட் மெட்ரோ நிலையம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்

அபு ஹைல் மெட்ரோ நிலையம் காலை 6.30 முதல் இரவு 10.35 வரை இயங்கும்

ஹத்தா நிலையம் காலை 5.30 முதல் இரவு 9.30 வரை செயல்படும்.

எக்ஸ்போ ரைடர் துபாய் நிலையங்களில் இருந்து வரும் அனைத்து சேவைகளும் டிசம்பர் 31 அன்று இரவு 10 மணிக்கு நிறுத்தப்படும்.

எக்ஸ்போ ரைடர் இன்டர்சிட்டி நிலையங்களில் இருந்து வரும் சேவைகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு நிறுத்தப்படும்.

வாகன சோதனை மையங்கள்

வாகன சோதனை மையங்கள் ஜனவரி 1, சனிக்கிழமையன்று மூடப்படும். இருப்பினும் மறுநாள் மீண்டும் திறக்கப்படும்.

வாடிக்கையாளர் சேவை மையங்கள்

RTA இன் வாடிக்கையாளர் சேவை மையங்கள் டிசம்பர் 31, வியாழன் முதல் ஜனவரி 2, ஞாயிறு வரை மூடப்படும். ஜனவரி 3 திங்கள் அன்று அவை மீண்டும் திறக்கப்படும்.