ADVERTISEMENT

பொதுத்துறை ஊழியர்களுக்கு புத்தாண்டு தின விடுமுறையை அறிவித்த அமீரக அரசு..!!

Published: 19 Dec 2021, 9:19 AM |
Updated: 19 Dec 2021, 9:19 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான புத்தாண்டு தின விடுமுறையை அமீரக அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அரசாங்க மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையம் (FAGHR) இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 1, 2022 சனிக்கிழமை அன்று அமீரகத்தில் புத்தாண்டு விடுமுறையாக இருக்கும் என்றும் புதிய வார நாள் வேலை முறையின் அடிப்படையில் ஜனவரி 3, 2022 திங்கட்கிழமை முதல் வேலை மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கான புத்தாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT