ADVERTISEMENT

அமீரகத்தில் வருட கடைசி நாளில் பெய்த மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

Published: 31 Dec 2021, 10:13 AM |
Updated: 31 Dec 2021, 10:16 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பரவலான மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலைத் துறை (NCM) வெளியிட்டுள்ள தகவலின் படி, துபாய் மற்றும் அபுதாபி உட்பட நாட்டின் சில பகுதிகளில் அதிகாலையில் மிதமான முதல் லேசான மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பெய்த மழைக்கு கிளவுட் சீடிங் (cloud seeding) முறை காரணம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்றைய நாளிற்கான வானிலை முன்னறிவிப்பில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT