ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு முதல் புதிய வார விடுமுறை நடைமுறைக்கு வரவிருப்பதால் இதனை முன்னிட்டு, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கட்டண வாகன நிறுத்தம் மற்றும் ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடும் நேரம் பற்றிய புதிய விவரங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய நேரங்கள் ஜனவரி 3, 2022 திங்கள் முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.
பார்க்கிங் கட்டணம்
தற்போதுள்ள பார்க்கிங் அமைப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதன் காரணமாக எப்போதும் போலவே வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசமாக இருக்கும்.
ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் மூடல்
பிப்ரவரி 2, 2022 முதல், ஃப்ளோட்டிங் பிரிட்ஜ் (floating bridge) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை மூடப்படும்.
வாடிக்கையாளர் சேவை மையங்கள்
இந்த மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மையங்கள் செயல்படாது.