ADVERTISEMENT

இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமீரகம் வந்திறங்கிய சவூதி இளவரசர் சல்மான்..!! இரு நாட்டு உறவுகள் பற்றி விவாதிப்பு..!!

Published: 8 Dec 2021, 7:58 AM |
Updated: 8 Dec 2021, 7:58 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று செவ்வாய்க்கிழமை அபுதாபி வந்தடைந்துள்ளார்.

ADVERTISEMENT

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள ப்ரெசிடென்ஷியல் ஏர்போர்ட் வந்திறங்கிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அவருடன் வந்த குழுவினரை, அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வரவேற்றுள்ளார்.

அபுதாபியில் உள்ள கஸ்ர் அல் வதானில் ஷேக் முகமது மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, தங்கள் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளையும் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்துள்ளனர். மேலும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சிகள் குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளனர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் கூட்டு நடவடிக்கை, பரஸ்பர நலன்கள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறியுள்ளனர். அத்துடன் GCC மற்றும் அரபு நாடுகளின் நடவடிக்கைகளை அதிகரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பேசியுள்ளனர். மேலும் உலகளாவிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கிய தூணான பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது தேசிய தினம் மற்றும் அமீரக மக்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு சவூதி அரேபியாவின் மன்னரும், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலருமான மாண்புமிகு சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.

ADVERTISEMENT