ADVERTISEMENT

UAE: வாரத்தில் 3 நாள் விடுமுறை.. 4 நாட்கள் மட்டுமே வேலை.. அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள ஷார்ஜா..!!

Published: 9 Dec 2021, 11:44 AM |
Updated: 9 Dec 2021, 11:58 AM |
Posted By: admin

அமீரக அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நிர்ணயித்துள்ள நிலையில், தற்பொழுது ஷார்ஜா அரசு வாரத்திற்கு நான்கு நாட்களை மட்டுமே வேலை நாளாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி ஷார்ஜாவில் அரசு ஊழியர்கள் வார நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலை நாட்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகின்றன.

அமீரக அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள அறிவிப்பில் சனி, ஞாயிறு மற்றும் வெள்ளி அரை நாள் ஆகிய இரண்டரை நாட்கள் புதிய வார இறுதி விடுமுறை நாட்களாக கூறியிருந்தது. ஆனால் ஷார்ஜாவில், சனி மற்றும் ஞாயிறு போன்றே வெள்ளிக்கிழமையும் முழு நாள் விடுமுறையாக இருக்கும் என தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரக சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜா ஆட்சியாளருமான ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமியின் உத்தரவுப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி பார்த்தால் உலகிலேயே ஷார்ஜாவில்தான் முதன் முறையாக வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT