ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்களுக்கு இம்மாத இறுதியில் தொடங்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை…!!! எப்போது..???

Published: 9 Dec 2021, 6:53 AM |
Updated: 9 Dec 2021, 6:57 AM |
Posted By: admin

அமீரக குடியிருப்பாளர்களுக்கு வரவிருக்கும் புத்தாண்டை நீண்ட நாள் விடுமுறையுடன் விமரிசையாக கொண்டாடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

அமீரக அரசின் அறிவிப்பு படி, ஜனவரி 1, 2022 முதல், சனி, ஞாயிறு மற்றும் வெள்ளி அரை நாள் புதிய வார இறுதி விடுமுறை நாட்களாகவும் வாரத்தின் மீதமுள்ள நான்கரை நாள் வேலை நாட்களாகவும் மாறும்.

இந்த ஆண்டு டிசம்பர் 31 வெள்ளிக்கிழமையில் வருகிறது. இந்த ஆண்டு முடியும் வரையிலும் தற்போதுள்ள படியே வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், அந்த நாள் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும்.  

ADVERTISEMENT

ஜனவரி 1 முதல் புதிய வேலை நாட்கள் நடைமுறைக்கு வருவதாலும் புத்தாண்டு விடுமுறையாகவும் ஜனவரி 1ம் தேதி சனிக்கிழமையும் புதிய வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களாகும். 

இதன் காரணமாக அமீரகத்தின் அரசு ஊழியர்கள் மற்றும் சில தனியார் துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் ஜனவரி 2 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ADVERTISEMENT

அரசு ஊழியர்கள் புத்தாண்டு முதல் புதிய வேலை நாட்களை பின்பற்றுவார்கள். இருப்பினும், தனியார் துறை நிறுவனங்கள் தங்களின் வேலை நாட்களை மாற்றத் தேவையில்லை என்றும் விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.