ADVERTISEMENT

அமீரகத்தில் ஜனவரி மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை வெளியீடு…!!

Published: 29 Dec 2021, 4:07 AM |
Updated: 29 Dec 2021, 4:07 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தினை ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் விலையானது சற்று குறைக்கப்பட்டுள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.77 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் ஜனவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.65 திர்ஹமாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.66 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் ஜனவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.53 திர்ஹமாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.
  • டீசல் : டிசம்பர் மாதத்தில் 2.77 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் ஜனவரி மாதம் முதல் லிட்டருக்கு 2.56 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது.